நான் உண்ணாவிரதம் இருப்பேன்-வாண்டையார்:ஐயோ, வேண்டாம்.. வேண்டாம்: ஜெ
சென்னை:ஆயுதத்துடன் வாகனத்தில் வந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரின் உண்ணாவிரதப் போராட்டத்தால் தனது மனம் வேதனைப்பட்டிருப்பதாகவும்,உண்ணாவிரதத்தைக் கைவிட்டு ஜனநாயகத்தைக் காக்க பல்லாண்டு உயிர் வாழ வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மிக உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பல கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் மாபெரும் ஜனநாயகவாதியான வாண்டையார். சசிகலாவின் முழு ஆதரவைப் பெற்றவர். சிதம்பரம் பகுதியில் அடாவடிக்குப் பேர் போனவர்.
சில நாட்களுக்கு முன் அமைச்சர் ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற இவரது மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சிலர் போலீஸாரால் பிடிக்கப்பட்டு சீர்காழி காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்து அங்கு ஆதரவாளர்களுடன் கிளம்பிப் போன வாண்டையார், அதிரடியாக தனது ஆதரவாளர்களை மீட்டுக் கொண்டு கிளம்பினார்.
இதையடுத்து அவரது வாகனத்தை நிறுத்தி சோதனை போட்ட போலீஸார் அதில் ஆயுதங்கள் இருந்ததால் அவரைக் கைது செய்து சூட்டோடு சூடாக திருச்சி மத்திய சிறையில் அடைத்து விட்டனர்.
உடனடியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வாண்டையார்.
இதையடுத்து ஜெயலலிதா, ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருகே ஆதமங்கலம் கிராமத்தில், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரை, ஒரு கட்சியின் தலைவர் என்று கூடப் பார்க்காமல், காவல்துறையினர் தரக்குறைவாகப் பேசி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
காவல்துறையின் அராஜகச் செயலைக் கண்டித்து வாண்டையார் உண்ணாவிரதம் இருக்கிறார். அவர் தனது போராட்டத்தைக் கைவிட வேண்டும். இது எனக்கும், அதிமுகவினருக்கும் மிகுந்த மன வேதனையை உண்டாக்கியுள்ளது.
மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கும், ஸ்ரீதர் வாண்டையாருக்கும், நானும், அதிமுகவும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகளில் துணை இருப்போம். உறுதுணையாக தோள் கொடுப்போம்.
கட்சியின் நன்மையைக் கருத்தில் கொண்டும், ஒட்டுமொத்த தமிழகத்தில் ஜனநாயகக் குரல்வளை நெரிக்கப்படுவதை எதிர்த்தும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக பேராட வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டும், ஸ்ரீதர் வாண்டையாரும், அவருடன் இருக்கும் அவரது கட்சித் தொண்டர்களும் தங்களது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அவர் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து, நல்ல உடல் நலத்துடன் இருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கும், எங்களுடன் இணைந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்றும் எனது பேரவாவினை தெரிவித்துக் கொள்கிறன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
வாழ்க ஸ்ரீதர் வாண்டையார்.. வாழ்க ஜனநாயகம்...
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications