லண்டனில் தவிக்கும் கிரிக்கெட் வீரர்கள்:தனி விமானம் அனுப்பும் இலங்கை
லண்டன்:கொழும்புக்கு விமான சேவையை எமிரேட்ஸ் நிறுவனம் ரத்து செய்து விட்டதால், தாயகம் திரும்ப முடியாமல் லண்டன் நகரில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களை தாயகம் அழைத்து வர சிறப்பு விமானத்தை இலங்கை அரசு அனுப்புகிறது.
விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் காரணமாக கொழும்பு விமான நிலையத்தில் பெரும் அச்ச சூழல் நிலவுகிறது. பல விமான நிறுவனங்கள் தங்களது இரவு நேர விமான சேவையை ரத்து செய்து விட்டன.
பயணிகளின் வருகை காரணமாக பல நிறுவனங்கள் தங்களது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. மேலும் பல விமானங்கள் சென்னைக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.
இதனால் தாயகம் திரும்ப முடியாமல் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தடுமாறி வருகின்றனர். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற இலங்கை வீரர்கள் தற்போது லண்டன் வந்துள்ளனர்.
அங்கிருந்து நேரடியாக கொழும்பு செல்ல எமிரேட்ஸ் விமானத்தில் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் எமிரேட்ஸ் நிறுவனம் தனது சேவையை நிறுத்தி வைத்துள்ளதால் கொழும்பு திரும்ப முடியாமல் அவர்கள் லண்டனிலேயே முடங்கியுள்ளனர்.
வியாழக்கிழமையே அவர்கள் கொழும்பு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், புலிகளின் விமானத் தாக்குதல் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டதால் அவர்கள் லண்டன் ஹோட்டலிலேயே தங்க நேரிட்டது.
இந்த நிலையில், கிரிக்கெட் வீரர்களை தாயகத்திற்கு அழைத்து வர இலங்கை அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதன்படி லண்டனிலிருந்து துபாய் வரை கத்தே பசிபிக் விமானம் மூலம் வீரர்களை அழைத்து வருவது, பின்னர் அங்கு சிறப்பு விமானத்தை அனுப்பி கொழும்புக்கு கூட்டி வருவது என திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து விரைவில் நாடு திரும்பி விடலாம் என்று இலங்கை அணி நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications