ஜனாதிபதி-சாட்டர்ஜியை களம் இறக்கும் கம்யூ.
டெல்லி:குடியரசுத் தலைவர் பதவிக்கு லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை நிறுத்தப் போவதாக இடது சாரி கட்சிகள் அறிவித்துள்ளன.
![]() |
குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாமையே மீண்டும் நிறுத்த வேண்டும் என நாடு முழுவதும் பரவலாக ஆதரவு நிலவுகிறது. பாஜக உள்ளிட்ட சில கட்சிகளும் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க ஆதரவு தெரிவித்துள்ளன.
முக்கிய கட்சியான காங்கிரஸ் இன்னும் தனது கருத்தைத் தெரிவிக்கவில்லை. அதேபோல இடது சாரிக் கட்சிகளும் கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தன. இருப்பினும் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க அவை எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்த நிலையில் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப் போவதாக அவை தற்போது அறிவித்துள்ளன.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கூறுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் சோம்நாத் சாட்டர்ஜியை நிறுத்த வேண்டும். நாங்கள் அவரையே வேட்பாளராக நிறுத்துவோம். அவரை ஒருமித்த வேட்பாளராக நிறுத்தினால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என்றார்.
இவரது கருத்தை பார்வர்ட் பிளாக் கட்சியும் வரவேற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியால் சொந்த வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு அவர்களுக்கு பலம் இல்லை என்றும் பார்வர்ட் பிளாக் கட்சி கூறியுள்ளது.
சாட்டர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேசமயம், சோம்நாத்துக்கு காங்கிரஸ் ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அந்தக் கட்சி மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து தனி வேட்பாளரை நிறுத்த முயலும் எனத் தெரிகிறது.
-
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்













Click it and Unblock the Notifications