காவிரியின் குறுக்கே இன்னொரு அணை கட்டகர்நாடகம் பகீர் திட்டம்
டெல்லி:தமிழக எல்லைப் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக அனுமதி கேட்டு நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
வற்றாத ஜீவ நதியாக கருதப்படும் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு ஏற்கனவே குறுக்கே கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளையும், தடுப்பணைகளையும் கட்டி தமிழகத்துக்கு நீர் செல்வதை தடுத்துவிட்டது.
இதனால் தமிழகத்தில் காவிரி ஆற்றில் நீருக்குப் பதில் வெறும் மணல் தான் உள்ளது.
இந்த புண்ணியத்தை சேர்ந்த கர்நாடகம் இப்போது ேமலும் தமிழகத்தின் வாழ்க்கையில் விளையாட முடிவு செய்துள்ளது. காவிரியின் குறுக்கே தமிழக எல்லைப் பகுதியில் புதிதாக அணையை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்யதுள்ளது.
ஒகேனக்கல் அருகே உள்ள பில்லிகுண்டுலு நீர் அளவை நிலையத்துக்கு மேலே இந்த புதிய அணையை கட்ட தீர்மனித்துள்ளது கர்நாடகம்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீர் அளவை கணக்கிட வேண்டுமானால் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்று கர்நாடகம் தெரிவித்துள்ளது (இது எப்படி இருக்கு).
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளது. அதே போல் நடுவர் மன்றத்திலும் விளக்கம் கோரும் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் புதிய அணை கட்டுவது குறித்து கர்நாடகம் தெரிவித்துள்ளது.
மனுவில் கூறியிருப்பதாவது,
காவிரி நீதிமன்றம் உத்தரவுப்படி ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கபினியில் இருந்த கேரளாவுக்கு 21 டிஎம்சி, தண்ணீர் கொடுத்த பின்பு சராசரி மழை பெய்யக்கூடிய காலங்களில் கூட தமிழகத்துக்கு 134 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுவது இயலாத காரியம்.
தமிழக எல்லையில் மேக தாதுவில் புதிய அணை இல்லாமல் மாதாந்திர அடிப்படையில் தண்ணீர் திறந்து விட முடியாது. தற்போது தமிழகத்துக்கு திறந்து விடும் தண்ணீரின் அளவு கணக்கிடப்படும் பில்லி குண்டு நீர் அளவை நிலையத்துக்கு மேலே இந்த புதிய அணை கட்டப்பட வேண்டும். புதிய அணை கட்டினால் மட்டுமே மாதாந்திர தண்ணீர் விநியோகத்தை பராமரிக்க முடியும் என கூறியுள்ளது.
தமிழகத்தின் தலையில் இன்னும் அதிகமாக மிளகாய் அறைக்கும் கர்நாடகத்தின் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது அவசியம்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications