ஓசூர் கல்குவாரியில் டெட்டனேட்டர் குவியல்
Subscribe to Oneindia Tamil
ஓசூர்:ஓசூர் அருகே கல் குவாரியில் இருந்து வெடி குண்டுகளை வெடிக்கச் செய்யும் டெட்டனேட்டர்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
தர்மபுரி பென்னாகரத்தை சேர்ந்த மாரிக்கண்ணு என்பவர், ஓசூர் அருகே கொள்ளபள்ளியில் கல்குவாரி வைத்துள்ளார்.
இந்த கல்குவாரியில் போலீஸார் இன்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது 126 வெடிக்காத டெட்டனேட்டர்களும், 66 வெடித்த டெட்டனேட்டர்களும் கிடந்தன.
மேலும் வெடிமருந்து தயாரிக்க பயன்படுத்தப்படும் அம்மோனியம் நைட்ரேட் பவுடர் மூட்டைகளையும் கைப்பற்றினர்.
இவற்றை வைத்திருக்க முறைபடி அனுமதி ஏதும் மாரிகண்ணு வாங்கவில்லை.
இதுதொடர்பாக கல்குவாரி மேலாளர் மணிவண்ணன்(42) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆனால் கல்குவாரியின் அதிபர் மாரிகண்ணு தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications