சேது திட்டத்தை முடக்க வட இந்திய மதவாததலைவர்கள் முயற்சி-கருணாநிதி கடும் எச்சரிக்கை
சென்னை:சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் தமிழகம் வளம் கொழிக்கும் மாநிலமாக மாறி விடும் என்பதால்தான் வட நாட்டைச் சேர்ந்த சில மதத் தலைவர்கள், ராமர் கட்டிய பாலம் என்று கதை கட்டி சேது சமுத்திரத் திட்டத்தையே முடக்க நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது என்று முதல்வர் கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டசபையில் ராமர் பாலம் தொடர்பாக சில உறுப்பினர்கள் பேசினர். அதற்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
1967ம் ஆண்டு சேது எழுச்சி நாள் கொண்டாடி அந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி அண்ணா முறையீடு செய்தார்.
அயோத்தியில் மதவாதம் புகுந்ததால், பாபர் மசூதியை இடித்து, ரத்த ஆறு ஓடச் செய்தது போல, ராமர் பாலத்தை இடித்தால், விபரீத விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டி சேது சமுத்திரத் திட்டத்தையே முடக்க நினைக்கிறார்கள்.
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறி விட்டால் இந்தியாவிலேயே தமிழகம் வளம் கொழிக்கும் மாநிலமாக மாறி விடுமே என்ற பயத்தால்தான், அதற்கு எதிரான போக்கைக் கொண்ட வட நாட்டு மதத் தலைவர்கள்தான் இந்தத் திட்டத்தை முடக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அது நடக்காது. நிச்சயம் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும்.
2001ம் ஆண்டு அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் என அழைக்கப்படும் பாலத்தில் உள்ள மணல் மேடுகளை, பாறைகளை அகற்றி சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்து விட்டு இப்போது எதிர்ப்பது சரியில்லை என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications