செக்ஸ் தொழிலாளர்கள் நடத்தும் வங்கியின் சாதனை
கொல்கத்தா:விபச்சாரப் பெண்களால் நடத்தப்படும் ஒரு வங்கி ரூ. 9 கோடி அளவுக்கு முதலீடுகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
கொல்ககத்தாவில் கடந்த 1995ம் ஆண்டு உஷா பன்னோக்கு கூட்டுறவு சங்கம் என்ற கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது. மேற்கு வங்க மாநில கூட்டுறவு வங்கியின் ஆரவுடன் இந்த வங்கியை, தர்பார் மகிளா சம்மனய் சமிதி என்ற அமைப்பு தொடங்கியது.
இந்த வங்கியை முழுக்க முழுக்க விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களே தொடங்கி நிர்வகித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் 5 மாவட்டங்களில் 8500 உறுப்பினர்கள் இதில் சேர்ந்துள்ளனர். இதன் முதலீடு ரூ. 9 கோடியைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.
மேற்கு வங்கத்தின் ரெட் லைட் ஏரியாவான சோனாகாச்சி பகுதியில்தான் முதலில் இந்த வங்கியின் கிளை தொடங்கப்பட்டது. அங்கு கணிசமான அளவு விபச்சாரப் பெண்கள் உறுப்பினராக சேர்ந்தனர். அதன் பின்னர் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விபச்சாரப் பெண்களும் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
இந்த கூட்டுறவு வங்கி ரூ. 15 லட்சம் வரை கடன் வழங்கி சாதனை படைத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பெண்களைத் தேடிப் போய் அவர்களுக்கு இந்த வங்கி சேவை செய்து வருகிறது.
கொல்கத்தாவில் 2, தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனா, நாடியா, முர்ஷிதாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்றும் என மொத்தம் 7 கிளைகளை இந்த வங்கி கொண்டுள்ளது.
வங்கியன் கடன் வழங்கும் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் சாந்தனு சாட்டர்ஜி வங்கியின் செயல்பாடுகள் குறித்துக் கூறுகையில், செக்ஸ் உழைப்பாளிகளின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தவே இந்த வங்கியை தொடங்கினோம். இப்போது தினசரி ரூ. 50 ஆயிரம் வரை முதலீடு செய்யப்படுகிறது என்றார்.
இந்த வங்கியின் தலைவரும், செக்ஸ் உழைப்பாளியுமான அமிதா தாஸ் கூறுகையில், இன்னும் நிறைய சிவப்பு விளக்குப் பகுதிகளில் கிளைகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
வங்கியின் ஆண்டு முதலீட்டின் அளவு ரூ. 9 கோடியைத் தொட்டு விட்டதாம்.
இந்த வங்கியில் கணக்குத் தொடங்க எந்தவிதமான அடையாள ஆவணங்களும் கேட்கப்படுவதில்லை. குறைந்தபட்ச முதலீடு ரூ. 15 தான். தினசரி தாங்கள் சம்பாதிக்கும் பணத்திலிருந்து ஒரு பகுதியை வங்கியில் சேமித்து வைக்குமாறு விபச்சாரப் பெண்களிடம் இந்த வங்கி பிரசாரம் செய்கிறது. அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
சோனாகாச்சி பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களில் பலர் வசதி இல்லாதவர்கள். தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் ஆணுறைகளைப் பயன்படுத்த மறுக்கும் நேரத்தில் தங்களிடம் பண வசதி இல்லாததால், தாங்களே வாங்கி வைத்துக் கொள்ளக் கூட முடியாத நிலையில் இருப்பவர்கள்.
தற்போது வங்கி வசதி வந்து விட்டதால் இவர்களே ஆணுறைகளை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். மருத்துவ சோதனைகளையும் அவ்வப்போது செய்து கொள்ள முடிகிறதாம்.
இந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் விபச்சாரப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் படிப்புக்கு கடன் பெற்று பயன் அடைந்து வருகின்றனராம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications