ராணுவம்-புலிகள் கடும் சண்டை: 12 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இலங்கையின் கிழக்கில் நடந்த கடும் சண்டையில் 12 கடல் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கடற்படை அதிகாரிகள் கூறுகையில், கிழக்கு திரிகோணமலை மாவட்டத்தில் நாயறு என்ற இடத்திலிருந்து புல்மோடையை நோக்கி கடல் புலிகள் 25 படகுகளில் வந்து கொண்டிருந்தனர். இவற்றில் நான்கு படகுகளில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டிருந்தன. அவற்றில் தற்கொலைப் படை வீரர்கள் இருந்தனர்.

நள்ளிரவு 11.30 மணியளவில் படகுகளைப் பார்த்து விட்ட கடற்படையினர் அவற்றை நிறுத்துமாறு எச்சரித்தனர். ஆனால் புலிகளின் படகுகள் நிற்கவில்லை. இதையடுத்து கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 படகுகள் சேதமடைந்து கடலில் மூழ்கின.

அப்படகுகளில் இருந்த 12 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டு விட்டனர். இன்று அதிகாலை வரை தாக்குதல் நடந்தது. மொத்தம் 6 படகுகள் சேதமடைந்து கடலில் மூழ்கி விட்டன.

இந்த சண்டையில் கடற்படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர் என்று கடற்படைத் தகவல் தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+