மத்திய பொதுப் பணித்துறை பொறியாளர்வீடுகளில் ரெய்டு-சிக்கிய பணக் குவியல்!
சென்னை:மத்திய பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மூன்று பேரின் வீடுகளில் நேற்று அதிரடி சிபிஐ சோதனை நடந்தது. இதில் ரூ. 90 லட்சம் அளவுக்கு கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. செயற்பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள மத்திய பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சிலர் பெருமளவில் லஞ்சம் வாங்கிக் குவிப்பதாக சிபிஐக்கு புகார்கள் போயின. இதையடுத்து கே.கே.நகர் மத்திய பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சுப்ரமணியன் மற்றும் 2 பொறியாளர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து இந்த மூன்று பொறியாளர்களின் வீடுகளிலும் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பெசன்ட் நகரில் உள்ள சுப்ரமணியனின் வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பணக் குவியல் சிக்கியது.
சுப்ரமணியனின் வீட்டு படுக்கை அறையில், படுக்கைக்குக் கீழே கட்டுக் கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருந்தனர். மொத்தம் ரூ. 35 லட்சம் பணம் சிக்கியது. ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சொத்துப் பத்திரங்கள் சிக்கின. இதுதவிர ஏராளமான நகைகளும் சிக்கின. இவை அனைத்துக்குமே முறையான கணக்குகள் இல்லை.
இவர் ஒருவர் வீட்டில் மட்டும் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் சிக்கியது குறிப்பிடத்தக்கது. மற்ற இருவரது வீடுகளில் பெரிய அளவில் நகை, பணம் எதுவும் சிக்கவில்லை.
கே.கே.நகரில் உள்ள மத்திய பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் வெள்ளை அடிக்கும் பணியை காண்டிராக்ட் விட்டதில் பெருமளவில் லஞ்சம் வாங்கியதாக சுப்ரமணியன் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதுதவிர மேலும் பல சட்டவிரோத முறைகளில் அவர் ஈடுபட்டு வந்ததாகவும் புகார்கள் உள்ளன.
சுப்ரமணியனிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய அதிகாரிகள் பின்னர் அவரைக் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications