புலிகள் தமிழக மீனவர்களைக் கொன்றிருக்கமாட்டார்கள்: ராமதாஸ், திருமாவளவன்
சென்னை: தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகள் கொன்றிருக்க மாட்டார்கள். அவர்கள் மீது வீண் பழி சுமத்தப்படுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் ஆகியோர் கூறியுள்ளார்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களைச் சுட்டுக் கொன்றதும், 12 மீனவர்களைக் கடத்திச் சென்றதும் விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் பிரிவினர்தான் என்று தமிழக டிஜிபி முகர்ஜி சமீபத்தில் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.
மேலும், விடுதலைப் புலிகள்தான் இதற்குக் காரணம் என முதல்வர் கருணாநிதியும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால் இது நம்பும்படியாக இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸும், திருமாவளவனும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ராமதாஸ் கூறுகையில், டிஜிபி முகர்ஜி சொல்வது நம்பும்படியாக இல்லை, ஏதோ மர்ம நாவலை படிப்பது போன்றுள்ளது.
விடுதலைப்புலிகள் தமிழக மீனவர்களை நிச்சயமாக கடத்தி இருக்க மாட்டார்கள், சுட்டு கொன்றிருக்கவும் மாட்டார்கள்.
விடுதலைப்புலிகள் தமிழர்களை தாக்கியதாக இதுவரை எந்த சம்பவமும் இல்லை. ஆனால் இலங்கை ராணுவம் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது.
அப்போதெல்லாம் ஆளும்கட்சி மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதும் அவ்வளவுதான். டிஜிபி விடுதலைப்புலிகள் மீது குற்றம்சாட்டுவதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம். அவர் கூறுவதை மக்கள் நம்பமாட்டார்கள்.
விடுதலைப்புலிகள் மீது தமிழர் எப்போதும் பரிவு காட்டுகின்றனர். அதை குலைக்கும் விதமாக விடுதலைப்புலிகள் நடந்து கொள்ளமாட்டார்கள்.
இந்த பரிவை வேரறுக்கவே இந்த மாதிரியான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர் என கருதுகிறேன் என்றார்.
திருமாவளவன் கூறுகையில், ஈழத் தமிழர்களின் திறமை, துணிச்சல் கண்டு தமிழர்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. இதைத் தடுக்கவே விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
இலங்கை நடத்தும் நாடகத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
விடுதலைப்புலிகள் இந்தியாவை பகைத்து கொள்ளமாட்டார்கள், அத்தகைய செயலில் ஈடுபடமாட்டார்கள், இதுவரை அப்படி நடந்ததும் இல்லை.
விடுதலைப்புலிகள் மீது திட்டமிட்டு பழி போடுகின்றனர். தமிழக டிஜிபி அறிக்கையை தமிழக மீனவர்களும், மீனவ அமைப்புகளும் நம்ப மாட்டார்கள் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications