ரகசியமாக அணை கட்டும் கர்நாடகம்;பாலைவனமாகப் போகும் தமிழகம்
மேட்டூர்: தமிழக எல்லையில் உள்ள ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் வேலையை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது.
காவிரியிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட தரக் கூடாது என்று காட்டுப் பிடிவாதம் பிடித்து வருகிறது கர்நாடகம். இந்த நிலையில் நடுவர் மன்றத் தீர்ப்பை கடுமையாக எதிர்த்துள்ள கர்நாடக அரசு, காவிரியில் புதிதாக ஒரு தடுப்பணை கட்டப் போவதாக நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அந்தத் தடுப்பணை கட்டும் பணியை கர்நாடக அரசு ஆரம்பித்து விட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 மாத காலமாக அணை கட்டும் பணி நடந்து வருகிறது. 1,000க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த அணை கட்டப்பட்டு வரும் இடம் கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டத்திற்கு 15 கி.மீ தொலைவில் உள்ளது. சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியின் அருகே இந்த அணை கட்டபடுகிறது.
இது தமிழ்நாட்டின் ஒகேனக்கலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. மேட்டூரிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது.
தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், அணை கட்டும் பகுதிக்குள் நுழையாமல் தடுக்க வேலி அமைக்கப்பட்டு காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக அரசுத் தரப்பில் கூறுகையில், இந்த பகுதியில் விவசாய நிலங்கள் இல்லாததால் கதவணை தடுப்பு மின் நிலையம் தான் அமைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
வெறும் தடுப்பணை கட்டி மின்சாரம் தயாரித்தால் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. ஆனால் கர்நாடகம் உண்மையிலேயே தடுப்பணை கட்டி மின்சாரம் தயாரிக்கப் போகிறதா அல்லது தண்ணீரை வேறு பகுதிக்குத் திருப்பும் எண்ணம் உள்ளதா என்பது தெரியவில்லை.
கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசாணையை வெளியிடும் வரை 1992ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பின்படி ஆண்டு தோறும் 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டும் என கூறியுள்ளது.
இந்நிலையில் கர்நாடக அரசு ரகசியமாக அணை கட்டுவதன் மூலம் மேட்டூருக்கு சும்மா வருகிற காவிரித் தண்ணீர் கூட இனி வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த அணை விவகாரம் குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
கர்நாடகத்தின் இந்த தடுப்பணையினால் தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலை உருவாகும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications