மகள் எரித்து கொலை: காவல் நிலையத்தில்பெற்றோர் போராட்டம்- கணவர் கைது
சென்னை: வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் மகளை எரித்துக் கொன்ற அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (23). கார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றும் ஹரீஷ் நடராஜ் என்பவருக்கும், பிரியாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
திருமணத்திற்குப் பின்னர் பிரியாவிடம் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி நட்ராஜ் குடும்பத்தினர் வற்புறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் பிரியா தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்து விட்டதாக நட்ராஜ், பிரியாவின் பெற்றோருக்கு போன் செய்துள்ளார்.
ஆனால் இதை நம்பாத பிரியாவின் பெற்றோர் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரில், தங்களு மகள் பிரியாவை நட்ராஜும் அவர் குடும்பதினரும் சேர்ந்து எரித்து கொலை செய்துள்ளனர்.
எங்களுக்கு பல கோடி மதிப்புள்ள வீடு சென்னையில் உள்ளது. அதை வரதட்சணையாக வாங்கி வரும்படி பிரியாவிடம் கேட்டுள்ளனர். ஆனால் பிரியா இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவளை அடித்து துன்புறுத்தினர். அறைக்குள் பூட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.
எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
போலீஸாரோ இதை கண்டுகொள்ளாமல் தற்கொலை என கூறி வழக்கை முடிக்க மும்முரமாக இருந்ததால், பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்நிலையம் முன் போராட்டம் நடத்தினர்.
இதனால் போலீஸார் நட்ராஜ், அவரது தந்தை சூரியநாதன், தாயார் உஷா, குடும்பத்தினர் அருண், விக்கி, சுரேஷ், ஹேமா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். நட்ராஜ் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications