100% வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டும்-ராமதாஸ்
சென்னை: ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக தொடர்ந்து பாமக போராடும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஈரோட்டில் பாமக சார்பில் மண்டல வாழ்வுரிமை மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில்,
சிறுபான்மை, பெரும்பான்மை என கூறுகின்றனர். ஆனால் நாம் அனைவரும் ஒரே பான்மையினர்தான். இந்த நாட்டின் பூர்வீக மக்களான நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள்.
பெரியார் பிறந்த இந்த நாட்டில் சமூகநீதி, இட ஒதுக்கீடு, வகுப்புவாத பிரதிநிதித்துவம் இல்லை என்று சொல்லும் நிலை உள்ளது.
பெரியார், அம்பேத்கார், வள்ளலார் போன்றவர்கள் போதித்த வழியில் நாங்களும் உரிமை வேண்டும், இட ஒதுக்கீடு வேண்டும் என ஈனக் குரலில் கேட்கிறோம்.
என்னை போராளி என அழைத்தால் உத்வேகம், உணர்வு ஏற்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராடுவதில் முன்னனியில் நிற்பேன்.
மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார இடஒதுக்கீடு வேண்டும். 100 சதவீதம் வகுப்பு வாரியான பிரதிநிதித்துவம் வேண்டும்.
இதற்காக அகில இந்திய அளவில் போராடுவோம். இதுவரை தமிழகத்தை ஆண்ட யாரும் இடஒதுக்கீடு குறித்து பேசவில்லை. இந்த 3 ஆண்டுகளாக நான் மட்டும் தான் போராடி வருகிறேன்.
இந்த மாநாடு ஓட்டுக்காக நடத்தவில்லை. இது தேர்தல் காலமும் இல்லை. ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்வுரிமை கிடைக்க வேண்டும், தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடி வருகிறோம்.
ஆனால் அரசு கல்வியை தனியாருக்கு கொடுத்துவிட்டு வாழ்க்கை தரத்தை கெடுக்கும் மதுவை விற்பனை செய்து வருகிறது.
இஸ்லாமிய-கிறிஸ்துவ மதத்தில் மது, லாட்டரி, ஆபாசம், சூதாட்டம் கூடாது என கூறுவதை போல் நாங்களும் இது வேண்டாம் என கூறுகிறோம்.
சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் கிடைக்கும் வரை நமது போராட்டம் தொடரும் என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications