டாக்கா சென்றது இந்திய கிரிக்கெட் அணி
கொல்கத்தா:இந்திய கிரிக்கெட் அணி கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு வங்கதேசத் தலைநகரான டாக்காவுக்கு போய் சேர்ந்தது.
வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த அணியுடன் 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.
இந்தியா, வங்கதேசத்திற்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கேப்டன் டிராவிட்டுக்கு மூக்கில் பலத்த காயமடைந்தார்.
இதனால் அவர் முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது.
ஆனால் வங்கதேசத்திற்கு புறப்படும் முன் செய்தியாளர்களை சந்தித்த டிராவிட்,
வங்கதேசத்துடான முதல் ஒரு நாள் போட்டியில் நான் விளையாடுவேன். வங்கதேச சுற்றுப்பயணத்தை நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். இந்திய அணி தனது திறமையை சிறப்பாக வெளிபடுத்தி வங்கதேசத் தொடரை வெல்லும் என அவர் கூறினார்.
வங்கதேசத்தில் இந்திய அணி வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்புடன் விமான நிலையத்தில் இருந்து அவர்கள் தங்கும் ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
வங்கதேசத்துடான டெஸ்ட் போட்டியில் மட்டும் இடம் பெற்றுள்ள டெண்டுல்கர், கங்குலி, கும்பிளே, லட்சுமண் உள்ளிட்ட இந்திய வீரர்கள் வரும் 15ம் தேதி டாக்கா செல்வுள்ளனர்.
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி
டிராவிட் (கேப்டன்), டோனி, காம்பீர், தினேஷ் கார்த்திக், ஜாகீர்கான், தினேஷ் மொங்கியா, முனாப் பட்டேல், பியுஸ் சாவ்லா, ரமேஷ் பவார், ஷேவாக், ஆர்பி.சிங், ஸ்ரீசாந்த், மனோஜ் திவாரி, உத்தப்பா, யுவராஜ் சிங்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications