கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏதிடீர் உண்ணாவிரதம் - கைது
மதுரை:மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் திடீர் உண்ணாவிரதம் இருந்த முன்னாள் பாமக எம்.எல்.ஏ முருகவேல்ராஜன் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அம்மச்சியாபுரத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் நடத்திய தடியடியில் லட்சுமி என்ற 60 வயதுப் பெண் காயமடைந்து மரணமடைந்தார்.
லட்சுமி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தினர்.
இதனால் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் லட்சுமி சாவு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் தலைமையில் சிலர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் அனைவரும் கைது செய்யப்பட்டனர். தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் நேற்று மாலை வரை அங்கு வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் போலீஸார் அனைவருக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுத்தனர். அதை வாங்கி சாப்பிட்டு விட்டு அனைவரும் அங்கிருந்து சென்றனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications