கருணாநிதியைப் பாராட்டி பேட்டி:க.சுப்பு அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ்
சென்னைமுதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழா கொண்டாட்டம் சரியானதே என்று பேட்டி அளித்த முன்னாள் எம்.எல்.ஏவும் அதிமுக சட்டமன்ற ஆலோசகருமான க.சுப்புவை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் ஜெயலலிதா.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான க.சுப்பு பல கட்சிகளில் இருந்தவர். ஆரம்பத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பின்னர் கட்சி உடைந்த பின்னர் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பிறகு அதிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்.
அதிலிருந்தும் விலகி காங்கிரஸில் இணைந்தார். பின்னர் அதிலிருந்தும் விலகி அதிமுகவில் சேர்ந்தார். அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதிக்கு 50 ஆண்டு கால சட்டசபை பொன்விழா கொண்டாடுவது குறித்து அவர் வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், கருணாநிதிக்கு விழா எடுப்பது சரியானதுதான், அவரது சாதனைகளை பாராட்டியாக வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தப் பேட்டியை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பெரிய செய்தியாக வெளியிட்டு விட்டது. இதுவே சுப்புவுக்கும் ஆப்பு வைத்து விட்டது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி சுப்புவை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா











Click it and Unblock the Notifications