மதுரை வன்முறை: கருணாநிதி கடும் அதிர்ச்சிபொன்விழா கொண்டாட்டம் வேண்டாம்
சென்னை:மதுரையில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் இன்று நடத்திய பயங்கர வன்முறைச் சம்பவத்தால் வெறுத்துப் போன முதல்வர் கருணாநிதி, இந்த சூழ்நிலையில் தனக்குப் பொன்விழா கொண்டாட்டம் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பால் ஆத்திரமடைந்த மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் இன்று மதுரையில் வெறியாட்டம் ஆடினர்.
நகர் முழுவதும் தினகர் நாளிதழ் எரிப்பு, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் கொடும்பாவிகள் எரிப்பு, பேருந்துகள் மீது கல்வீச்சு என அவர்கள் ஆடிய ஆட்டத்தால் மதுரை மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
இதை விட உச்சமாக தினகரன், சன் டிவி அலுவலகத்தில் சரமாரியாக தாக்குதல் நடத்தி இரு ஊழியர்களை கொலை செய்துள்ளனர்.
மதுரை வெறியாட்டம் குறித்து சட்டசபையில் இருந்த முதல்வர் கருணாநிதிக்குத் தகவல் கிடைத்தது. முகம் இறுகிப் போன கருணாநிதி உடனடியாக அவையிலிருந்து வெளியேறினார்.
சட்டசபை வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்திற்கு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை வரவழைத்து அவர்களுடன் அவரச ஆலோசனை நடத்தினார்.
சுமார் அரை மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. மிகவும் அதிர்ச்சியுடன் காணப்பட்ட முதல்வர் வன்முறை குறித்து மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.
மேலும், தனது சட்டசபை பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியை உடனடியாக ரத்து செய்யும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்ட நிலையில் நிகழ்ச்சியை ரத்து செய்வது சரியாக இருக்காது. உங்களது மனதை மாற்றிக் கொள்ளுங்கள், நிகழ்ச்சியை வேண்டாம் என்று சொல்ல வேண்டாம் என கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியை சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து நீண்ட யோசனைக்குப் பின் அவர் தன் மனதை மாற்றிக் கொண்டார்.
மே 11ம் தேதி சென்னையில் சட்டசபையில் கலைஞர் பொன்விழா நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
திருப்பரங்குன்றம் தீபம்.. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலுக்கு தமிழிசை சௌந்திரராஜன் கண்டனம் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications