ஊற்றிக் கொடுப்பதை குறைக்க கோரும் ராமதாஸ்
சென்னை:எம்.ஏ., எம்.எஸ்.சி படித்தவர்கள் டாஸ்மாக் கடைகளில் ஊற்றிக் கொடுக்கும் நேரத்தைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாமகவின் பாட்டாளி தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் மேதினப் பேரணி சென்னையில் நடந்தது. பின்னர் மாநாடும் நடந்தது. அதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில்,
எம்.ஏ., எம்.எஸ்.சி படித்தவர்கள் இன்று டாஸ்மாக் மதுக் கடைகளில் ஊற்றிக் கொடுக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.
ஆண்டுக்கு அரசுக்கு ரூ. 7,000 கோடி வருமானம் வருகிறதாம். அதில் ரூ. 200 கோடியை டாஸ்மாக் ஊழியர்களுக்காக ஒதுக்கலாம். காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஊற்றிக் கொடுக்கிறார்கள்.
டீக் கடைகளைக் கூட 10 மணிக்கு மூடச் சொல்கிறார்கள். ஆனால் டாஸ்மாக் கடைகள் மட்டும் 12 மணி வரை திறந்திருக்கிறது. அதை 4 மணி முதல் 8 மணி வரை ஊற்றிக் கொடுத்தாலே போதும் என்று மாற்ற வேண்டும்.
தமிழத்தில் ஆம்னி பேருந்துகள் யார் பெயரில் பினாமியாக ஓடுகிறது என்று தெரியும். எந்த அதிகாரிக்கு, அரசியல்வாதிக்கு எத்தனை ஆம்னி பஸ்கள் என்று கணக்கிட்டால் வெட்கக்கேடு.
இந்த அரசு பற்றிச் சொல்லவில்லை. முந்தைய ஆட்சியில், ஆம்னி பஸ்களுக்கு யார் யார் பினாமி என்று பட்டியல் உள்ளது. அதை ஒரு நாள் நாம் வெளியிடுவோம்.
முந்தைய அரசு தொழிலாளர் விரோத அரசாக இருந்தது. ஆனால் திமுக அரசு தொழிலாளர் நல அரசாக உள்ளது. அப்படியே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றார் ராமதாஸ்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications