ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு:ஜூன் 11ல் தீர்ப்பு
சென்னை: சென்னை சேத்துபட்டு ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் ஜூன் 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
சென்னை சேத்துபட்டில் இயங்கி வந்த ஆர்எஸ்எஸ் அலுவலகம் கடந்த 1993ம் வருடம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இவ்வழக்கில், அல் உம்மா தலைவர் பாஷா, பழனி பாபா, ஹைதர் அலி, இமாம் அலி, ரபீக் அகமது, சதாபூதின், முக்தார் அகமது, அப்துல்ரஹீம், அபுபக்கர் சித்திக், அகமது ஞானியார், அமருதீன், செரீ, முகமது முசாமொய்தீன், அதுல்புகாரி, முகமது அலி, முகமது அசல், முகமது கபேர், காஜா நிஜாமுதீன், முஸ்தாக் அகமது உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அனைவர் மீதும் சென்னை 2வது தடா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1994 வருடம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 1995 வருடம் விசாரணை தொடங்கியது. வழக்கு நடைபெறும்போது பழனி பாபா கொல்லப்பட்டார். இமாம் அலி பெங்களூரில் நடந்த போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 224 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 7 பேர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். மீதம் 8 பேர் சிறையில் உள்ளனர். வழக்கு விசாரணை கடந்த மாதம் 18ம் தேதி முடிவடைந்தது.
தீர்ப்பு மே 9ம் தேதி அளிக்கப்படும் என நீதிபதி ராமசாமி அறிவித்திருந்தார். இதையொட்டி நீதிமன்றத்தில் நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வழக்கு தொடர்பான மேலும் சில ஆவணங்களை பார்க்க வேண்டியிருப்பதால் அடுத்த மாதம் 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications