சென்னையில் முக.அழகிரி-சமாதானப் பேச்சு?
சென்னை:மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நிலவும் பரபரப்பான பின்னணியில், முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி இன்று காலை திடீரென சென்னைக்கு வந்தார். சமாதானப் பேச்சுக்காக அவர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பால் ஆத்திரமடைந்த மு.க.அழகிரி ஆதரவு திமுகவினர் தினகரன் மற்றும் சன் டிவி அலுவலகத்தை கடுமையாக தாக்கினர். இதில் 3 ஊழியர்கள் பலியானார்கள். சன்டிவி, தினகரன் அலுவலகம் முற்றிலும் சேதமடைந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் இதுவரை மு.க.அழகிரியின் பெயரை போலீஸார் சேர்க்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
இந்த நிலையில், அழகிரி இன்று காலை திடீரென மதுரையிலிருந்து சென்னைக்கு விரைந்து வந்தார். பாரமவுண்ட் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை வந்த அவர், வழக்கமான பாதையில் வெளியே வராமல், முக்கியப் பிரமுகர்கள் அழைத்து வரப்படும் பாதையில் அழைத்து வரப்பட்டார்.
அவரை தென் சென்னை காவல்துறை இணை ஆணையர் துரைராஜ், உதவி ஆணையர் குப்புசாமி ஆகியோர் பாதுகாப்புடன் வெளியே அழைத்து வந்தனர். அவருக்குப் பாதுகாப்பாக கூடவே சென்றனர்.
அழகிரியை முக்கியப் பிரமுகர்கள் அழைத்து வரப்படும் பாதையில் அழைத்துச் செல்லப்பட்டதை விமான நிலைய அதிகாரிகளுக்கும், விமான நிலைய பாதுகாப்புப் படையினருக்கும் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.
அழகிரியின் சென்னை வருகை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மதுரை தாக்குதலைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களாக முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் சமாதானப் பேச்சுக்கள் நடந்து கொண்டுள்ளன.
பேச்சு நடத்துவதற்காக கலாநிதி மாறனையும், தயாநிதி மாறனையும் முதல்வர் கருணாநிதி பலமுறை அழைத்தும் கூட அவர்கள் வர மறுத்து விட்டனராம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று அவர்கள் கருணாநிதியிடம் கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில், மு.க.அழகிரியை கருணாநிதிதான் சென்னைக்கு அழைத்திருப்பதாக தெரிகிறது. அழகிரி, மு.க.ஸ்டாலின், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோரை ஒன்றாக அமர வைத்து பேச கருணாநிதி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் இதற்கு மாறன் சகோதரர்கள் முன்வருவார்களா என்பது தெரியவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications