தினகரன்: ராஜ்யசபாவில் அதிமுக மீண்டும் அமளி
டெல்லி: மதுரை தினகரன் அலுவலகத்தில் திமுகவினர் நடத்திய வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரி அதிமுக உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் இன்றும் 2வது நாளாக அமளியில் ஈடுபட்டனர்.
இன்று காலை ராஜ்யசபா கூடியதும் அதிமுக உறுப்பினர்கள் எழுந்து மதுரை வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். ஆனால் அதை ஏற்க மறுத்த ராஜ்யசபா தலைவர் பைரான் சிங் ஷெகாவத் அதிமுகவினர் இருக்கையில் அமர வேண்டும் என்றார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர். ஒரு கட்டத்தில் அதிருப்தி அடைந்த ஷெகாவத், உங்களுக்கு என்னதான் வேண்டும் என்றார்.
அதற்கு அதிமுக உறுப்பினர்கள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து விட்டது, திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.
மேலும், அவைத் தலைவர் இருக்கைக்கு முன்பு கூடி கோஷமிட்டபடி இருந்தனர். உறுப்பினர் கோகுலஇந்திரா ஷெகாவத்தை நோக்கி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காவல்துறையின் கையை விட்டுப் போய் விட்டது. எனவே இதை சபையில் விவாதிக்க வேண்டும் என்றார்.
இதை ஏற்ற ஷெகாவத், பிரச்சினை முக்கியமானதுதான். அதை ஏற்கிறேன். கேள்வி நேரம் முடிந்த பின்னர் இதுகுறித்து விவாதிக்கலாம் என்றார். ஆனால் அதிமுக உறுப்பினர்கள் அதை ஏற்க மறுத்தனர்.
அந்த சமயத்தில், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் எழுந்து அதிமுகவினரை எதிர்த்து பேசினர். பதிலுக்கு அதிமுகவினரும் கோஷமிட்டனர்.
இப்படியாக தொடர்ந்து அமளி நிலவி வந்த நிலையில் பெரும் சிரமத்திற்குப் பின்னர் அதிமுகவினரை சமாதானப்படுத்திய ஷெகாவத், அவர்களை கலைந்து போகச் செய்தார்.
இருப்பினும், முதலாவது சுதந்திரப் போராட்டத்தின் 150வது ஆண்டு விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளையொட்டி அவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார் ஷெகாவத்.
-
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்!












Click it and Unblock the Notifications