சட்டசபைக்கு புது கட்டடம்: கருணாநிதி அறிவிப்பு
சென்னைதமிழக சட்டசபைக்கு புதிய கட்டடம் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் நேற்றும், இன்றும் தனக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு ஏற்புரையாற்றி கருணாநிதி பேசுகையில், இந்த சட்டசபையில் நடந்த பல்வேறு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வுகள் என் மனதில் வந்து போகிறது.
சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என மாற்ற இந்த சட்டசபையில்தான் அண்ணா தீர்மானம் கொண்டு வந்தார்.
உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும் சட்ட மசோதா இந்த சட்டசபையில்தான் கொண்டு வரப்பட்டது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சட்ட மசோதாவும் இங்குதான் கொண்டு வரப்பட்டது.
எனக்கு நடைபெற்ற பொன்விழாவையொட்டி சட்டசபைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் கோரினார்கள். அதை ஏற்று சட்டசபைக்குப் புதிய கட்டடம் கட்டப்படும் என இப்போது அறிவிக்கிறேன்.
பழமையைப் பாதுகாப்போம், புதுமையை நாடுவோம் என்பதற்கேற்ப விரைவில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்படும். திமுக ஆட்சிக்காலத்திலேயே அதன் தொடக்க விழாவையும் நாம் காண்போம் என நம்புகிறேன் என்றார் கருணாநிதி.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications