முதல்வராக பதவியேற்றார் மாயாவதி:19 அமைச்சர்களும் பதவியேற்பு
லக்னோ:நான்காவது முறையாக உ.பி. முதல்வராக மாயாவதி இன்று பதவியேற்றார். அவருடன் 19 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
![]() |
உ.பி. சட்டசபைத் தேர்தலில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி. நீண்ட காலத்திற்குப் பிறகு தனிப் பெரும்பான்மையுடன், ஒரு கட்சி ஆட்சி உ.பியில் அமைகிறது.
சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் நேற்று கூடி தங்களது சட்டசபைக் கட்சித் தலைவராக மாயாவதியைத் தேர்வு செய்தனர்.
இதையடுத்து மாலையில், ஆளுநர் மாளிகைக்குச் சென்ற மாயாவதி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் ஆளுநர் ராஜேஷ்வரிடம் அவர் கொடுத்தார்.
இதையடுத்து இன்று ராஜ்பவனில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் மாயாவதிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 19 அமைச்சர்களும் பதவிேயற்றனர்.
மாயாவதி உ.பி. முதல்வராகப் பதவியேற்பது இது 4வது முறையாகும். உ.பியின் 32வது முதல்வராகவும் மாயாவதி பதவியேற்கிறார்.
403 பேர் கொண்ட சட்டசபையில் 206 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளார் மாயாவதி.
கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பியில் தனிப் பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சி அமைவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications