தொலைத் தொடர்புத்துறை அமைச்சரானார் ராசா:ரகுபதியிடம் வனத்துறை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையிலிருந்து தயாநிதி மாறனை விலக்கிய திமுக தலைவர் கருணாநிதி, அந்தத் துறையை மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராசாவிற்கு வழங்க பரிந்துரைத்தார். இதையடுத்து இன்று தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக ராஜா நியமிக்கப்பட்டார்.
![]() |
இதுவரை ராஜாவிடம் இருந்த வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவை இனி பிரதமரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தத் துறையின் இணையமைச்சர் பதவி உள்துறை இணையமைச்சர் ரகுபதியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் பரிந்துரையை ஏற்று இதற்கான உத்தரவுகளை இன்று ஜனாதிபதி மாளிகை வெளியிட்டது.
![]() |
44 வயதான ராசா, கருணாநிதி மற்றும் மறைந்த முரசொலி மாறனின் அன்புக்கு பாத்திரமானவர். வழக்கறிஞரான இவர் பெரம்பலூர் ரிசர்வ் தொகுதியில் இருந்து 3 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
வாஜ்பாய் அரசில் மத்திய நலத்துறை இணையமைச்சராக இருந்தார்.
சிறந்த எழுத்தாளருமான ராசா, கவிதைகளும் எழுதுவார். ஆனால், தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு என்ற ஹை-டெக் துறைகளை கவனிக்கும் அளவுக்கு ராசாவுக்கு திறமை உள்ளதா என்பதை அவரது செயல்பாடுகளை வைத்து தான் எடை போட முடியும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications