குமரியில் தொடரும் கடல் கொந்தளிப்பு:வள்ளுவர் சிலைக்கு படகு சவாரி நிறுத்தம்
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் இன்றும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிளில் கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு அதிகம் காணப்படுகிறது. வழக்கமாக மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் இங்கு கடல் கொந்தளிப்பு ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் இம்முறை கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளால் மீனவர்கள் பீதியடைந்துள்ளனர்.
அடிக்கடி கடல் கொந்தளிப்பும், ராட்சத அலைகள் எழுந்து ஊர்களுக்குள் தண்ணீர் புகுவதும், கடல் உள்வாங்குவதும் அதிக அளவில் உள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் போக முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துரை கிராமத்தில் நேற்று கடல் கொந்தளிப்பு அதிகம் இருந்தது. கிட்டத்தட்ட 20 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்து வீடுகளுக்குள் தண்ணீ புகுந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பீதியடைந்து வேறு பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
இன்றும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. ராஜாக்கமங்கலம் துரை கிராமத்தில் 25 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
கீழ மணக்குடி, மேல மணக்குடி, குளச்சல், கோவளம் ஆகிய கிராமங்களிலும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது.
கன்னியாகுமரியில் 20 மீட்டர் வரைக்கும் கடல் உள்வாங்கியது. இதனால் வள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேசமயம் விவேகானந்தர் பாறைக்கு வழக்கம் போல படகுப் போக்குவரத்து நடந்து வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications