இட ஒதுக்கீடு வழக்கு: 5 நீதிபதிகள் கொண்டஅரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம்
டெல்லி:மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதையடுத்து இந்தத் தடையை நீக்கக் கோரியும், வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றக் கோரியும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரிசித் பச்சாயத், பி.கே.ஜெயின் ஆகியோர் வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
உத்தரவை பிறப்பிக்கும் முன்பு நீதிபதிகள் கூறுகையில், இந்த ஆண்டு நிச்சயம் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த முடியாது. ஜாதி அடிப்படையிலான இந்த இட ஒதுக்கீடு சட்டத்தின் மூலம் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிபோவதை அனுமதிக்க முடியாது.
இந்த சட்டம் குறித்து அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும்போது, 93வது அரசியல் சாசன திருத்தத்தை விரிவாக ஆராய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications