பதவியேற்றார் ராதிகா செல்வி: உள்துறை இணையமைச்சரானார்
டெல்லி:திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.பியான ராதிகா செல்வி மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையின் தர்பார் ஹாலில் நடந்த எளிய நிகழ்ச்சியில் அவருக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது ஆங்கிலத்தில் பதவியேற்றுக் கொண்டார் ராதிகா செல்வி.
![]() |
மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பொறுப்பில் இருந்து தயாநிதி மாறன் ராஜினாமா செய்ததையடுத்து அவரது பதவிக்கு சுற்றுச்சுழுல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த ஏ.ராசாவுக்கு அப்பதவி மாற்றப்பட்டது.
இதையடுத்து அவர் வசம் இருந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையை பிரதமர் தன் வசம் வைத்துக் கொண்டார்.
தயாநிதி மாறன் ராஜினாமாவில் குறைந்த ஒரு இடத்தில் ராதிகா செல்வி சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு ராதிகா செல்விக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
உள்துறை இணையமைச்சராக இருந்த ரகுபதி வனத்துறை இணையமைச்சராக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ராதிகா செல்விக்கு உள்துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
தூத்தூக்குடியை சேர்ந்த ராதிகா செல்வி (31), குடும்ப தலைவியாக இருந்து மத்திய அமைச்சராக தன் பயணத்தை தொடங்கியுள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் துணைவியான இவர், நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.
சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பிறகு தமிழகத்திலிருந்து சென்றுள்ள இரண்டாவது பெண் மத்திய அமைச்சராவார். இதன் மூலம் திமுகவின் 3 பெண் எம்பிக்களில் 2 பேர் மத்திய அமைச்சர்களாகியுள்ளனர்.
முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழியின் தோழியான இவர் திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் திமுகவின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது தயாநிதி மாறன் ராஜினாமாவில் குறைந்த ஒரு இடத்தில் ராதிகா செல்வி சேர்க்கப்பட்டுள்ளார்.
இவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கியதின் மூலம் நாடார் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றி வைத்துள்ளார்.
திமுகவிலிருந்து பிரிந்து நடிகர் சரத்குமார் நாடார் சமூகத்தை சார்ந்து தனியாக கட்சி தொடங்க இருக்கும் நிலையில் ராதிகா செல்வியை மத்திய அமைச்சராக நியமித்திருப்பது சரத்குமார் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
