ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடவில்லை-பிரணாப்
டெல்லி: ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை, என்னை வேட்பாளராக கூறுவது யூகம்தான் என வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி பதவிக்கு இந்திய வெளி்யுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்த முடிவெடுத்துள்ளது. இதற்கு கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீதாராம் எச்சூரி ஆதரவு தெரிவித்துள்ளார். மாயாவதி கட்சியும் அவருக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளது.
![]() |
இந்நிலையில் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனாதிபதி பதவி வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் இல்லை. என்னை வேட்பாளராக கூறுவது யூகம்தான். காங்கிரஸ்காரனான எனக்கு கட்சியிலும், அரசியலும் என்ன பங்கு என்பது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.
என் தகுதிகேற்ப எந்த பொறுப்பையும் திருப்திகரமாக முடிக்க தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன் கூறுகையில்,
கூட்டணி கட்சிகளுடன் ஜனாதிபதி பதவி வேட்பாளர் குறித்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இந்த நிலையில் அதை பற்றி கூறுவது சரியாக இருக்காது. இதுகுறித்து முடிவு எடுக்க காலஅவகாசம் உள்ளது என்றார்.













Click it and Unblock the Notifications