டாக்டர்களின் அலட்சியம்-சிறுமி பரிதாப சாவு
சென்னை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் 8 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகள் ரூபிகா (8). ரூபிகாவுக்கு நேற்று திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவளை திருவல்லிக்கேணியில் உள்ள அரசினர் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிறுமி ரூபிகாவுக்கு சுமார் 4 மணி நேரம் சிகிச்சை அளித்துள்ளனர்.
பின்னர் ரமணா படத்தில் வருவது போல, தீவிரமாக முயன்றோம், சிகிச்சை பலனளிக்கவில்லை, இறந்து விட்டார் என்று கூறி ரூபிகாவின் உடலை எடுத்துச் செல்லும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து ரூபிகாவின் உடலை உதயக்குமாரும் மற்றவர்களும் வீட்டுக்குக் கொண்டு வந்தனர். ஆனால் வீட்டுக்கு வந்த பிறகுதான் ரூபிகா மூச்சு விடுவதும், அவர் உயிருடன் இருப்பதும் தெரிய வந்து அதிர்ந்தனர்.
அலறி அடித்தபடி குழந்தையை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். சரியான சிகிச்சை அளித்திருந்தால் குழந்தையைக் காப்பாற்றியிருக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.
கஸ்தூரிபாய் மருத்துவமனையில் தங்களது குழந்தைக்கு சரியான சிகிச்சை தராமலும், குழந்தை இறந்து விட்டதாக பொய் கூறி அனுப்பி வைத்ததாலும் ஆத்திரமடைந்த உதய்குமாரும் உறவினர்களும் அங்கு சென்று குழந்தையின் பிணத்துடன் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications