நைஜீரியத் தீவிரவாதிகள் பிடியில் இந்தியஎன்ஜீனியர்கள் - மீட்பு முயற்சிகள் தீவிரம்
போர்ட் ஹார்கோர்ட்:நைஜீரியாவில் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள இரண்டு இந்திய என்ஜீனியர்ளையும் மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் போர்ட் ஹார்கோர்ட் பகுதியில் இந்தோனேசியாவின் இந்தோரமா நிறுவனத்துக்குச் சொந்தமான பெட்ரோலிய நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்காக அருகிலேயே குடியிருப்பு உள்ளது.
இங்கு துப்பாக்கிகள் சகிதம் புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்த 9 இந்திய பொறியாளர்களை கடத்த முயன்றனர். அப்போது ராணுவம் அங்கு விரைந்து வந்தது. ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
இதையடுத்து தீவிரவாதிகள் தேபஷிஷ் கஹோட்டி, சுனில் தவே ஆகிய இரு என்ஜீனியர்களை மட்டும் கடத்திக் கொண்டு தப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இரு இந்தியர்களையும் விட வேண்டும் என்றால் பல லட்சம் ரூபாய் பணத்தை தங்களுக்குத் தர வேண்டும் என்று தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகள் தரப்புடன் நைஜீரிய அரசும், இந்தியப் பொறியாளர்கள் வேலை பார்த்து வரும் நிறுவனமும் பேச்சு நடத்தி வருகின்றன. இந்திய தூதரகமும் மீட்பு முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இருவரும் பத்திரமாக இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. கஹோட்டி அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். மனைவி, ஒரு மகனுடன் நைஜீரியாவில் வசித்து வருகிறார். தவே மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications