மதுக் கடைகளை ஒழிக்க வேண்டும்:கருணாநிதியிடம் ராமதாஸ் கோரிக்கை
சென்னை:தமிழகத்தில் மதுக் கடைகளை படிப்படியாக ஒழிக்க வேண்டும். முதலில் மது பார்களை மூட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை திடீரென சந்தித்தார் டாக்டர் ராமதாஸ். நேற்று முன்தினம்தான் சென்னையில் நடந்த மது ஒழிப்பு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, மதுக் கடைகளை மூட முதல்வர் உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் மதுக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டத்தில் பாமக இறங்கும் என்று எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முதல்வரை அவர் திடீரென சந்திக்க வந்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கோபாலபுரம் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மரியாதை நிமித்தமாகத்தான் முதல்வரை சந்தித்தேன். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என முக்கியமாக முதல்வரிடம் வலியுறுத்தினேன்.
மது விலக்கை படிப்படியாக கொண்டு வர வேண்டும். அதற்கு முதலில் கடைகளை ஒட்டி வைக்கப்பட்டுள்ள பார்களை மூட வேண்டும். கடைகளை பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் திறந்து வைக்கலாம் என யோசனை சொன்னேன்.
மதுவை ஒழிக்க முடியுமா, அது சாத்தியமா என்று முதல்வர் கேட்டார். படிப்படியாக மதுவை ஒழிக்க முடியும் என்றேன். யோசிக்கலாம் என்று முதல்வர் சொன்னார்.
பிறகு நதி நீர் இணைப்பு குறித்து பேசினோம். டெல்லியில் பிரதமரை முதல்வர் சந்தித்து இதுகுறித்து பேசவுள்ளார். அந்தத் திட்டத்தை மத்திய பட்டியலில் சேர்ப்பது குறித்தும் வலியுறுத்தினேன்.
அதன் பின்னர் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகிய பிரச்சினைகள் தொடர்பாகு நான்கு மாநில முதல்வர்களும் சேர்ந்து, பிரதமர் முன்னிலையில் பேச்சு நடத்த வேண்டும். தனித் தனியாக பேசினால் இழுத்துக் கொண்டேதான் செல்லும், நேரமும் வீணாகிறது.
சென்னை விமான நிலைய விரிவாக்கத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல் இந்திய விமான நிலைய ஆணையம் மூலமே செய்ய வேண்டும். ஓரகடம் அல்லது ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலையத்தை அமைக்கலாம்.
ரிலையன்ஸ் கடைகளுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. ஈரோட்டில் வியாபாரிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அந்தப் பிரச்சினை தொடர்பாக இதுவரை முதல்வர் கருணாநிதி தனது நிலையை தெளிவாக சொல்லவில்லை. அதுகுறித்தும் அவரிடம் கேட்டேன் என்றார் ராமதாஸ்.
அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணியும் உடன் இருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications