950 மார்க்குகள் எடுத்தும் மேல் படிப்புக்குவழியில்லை-துயரத்தில் மாணவி தற்கொலை
மதுரை:பிளஸ்டூ தேர்வில் 950 மதிப்பெண்கள் எடுத்தும் கூட மேல் படிப்பு படிக்க குடும்ப பொருளாதாரம் அனுமதி தராததால் மனம் உடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை, உசிலம்பட்டி அருகே உள்ள நல்லுத்தேவன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆடு மேய்க்கும் தொழிலாளியான பாலு. இவரது மனைவி முத்துப் பிள்ளை. இவர்களுக்கு கண்ணன் என்கிற மகனும், அனுராதா, செருவச் செல்வம் (18) ஆகிய மகள்களும் உள்ளனர்.
கண்ணனும், அனுராதாவும் வேலை பார்க்கின்றனர். செருவச் செல்வம் பிளஸ்டூ படித்துள்ளார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் செருவச் செல்வம் 950 மதிப்பெண்கள் பெற்றார்.
பி.எஸ்.சி நர்சிங் படிப்பு படிக்க விரும்பிய செருவச் செல்வம் அம்மாவிடம் விண்ணப்பம் வாங்க அனுமதி கேட்டார். ஆனால் குடும்ப பொருளாதாரம் திருப்திகரமாக இல்லை. இதில் நீ எப்படி மேல் படிப்பு படிக்க முடியும் என தாயார் கூறவே மன வேதனை அடைந்தார் செருவச் செல்வம்.
இதனால் மாணவியின் மனம் உடைந்தது. படிக்க ஆசை இருந்தும் அதற்கு வழி இல்லையே என்று வேதனை அடைந்த அவர் பூச்சி மருந்து குடித்து விட்டார். மயங்கி விழுந்த மகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை உசிலம்பட்டிக்குக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் செருவச் செல்வம் பரிதாபமாக இறந்தார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications