பிரபாகரனை கொண்டு வராதது ஏன்? சுவாமி கேள்வி
சென்னை:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நாடு கடத்திக் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயற்சி எடுக்காதது ஏன் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
பிரபாகரன் உத்தரவின் பேரிலேயே ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. பிரபாகரனை முதல் குற்றவாளியாகவும் விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிரபாகரனுக்கு எதிராக சர்வதேச போலீஸும் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தனைக்குப் பிறகும் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வர முயற்சி எடுக்காமல் உள்ளது தேசத்திற்கே அவமானமாகும்.
மாறாக, பிரபாகரனுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. பிரபாகரனை கொண்டு வர முயற்சிக்காமல், பல ஆண்டுகளாக மெளனம் சாதிப்பது ஏன் என்பதற்கு சோனியா காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரபாகரன்.
இன்று ராஜீவ் காந்தியின் நினைவு தினம் என்பது நினைவிருக்கலாம்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications