திருப்பதி கோவிலின் புதிய டிவி சேனல்:அக்டோபர் முதல் ஒளிபரப்பு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்காக தனி டிவி சேனல் தொடங்கப்படுகிறது. அக்டோபர் மாதம் நடக்கும் பிரம்மோற்சவம் முதல் இந்த புதிய டிவி சேனல் ஒளிபரப்பு தொடங்கும் என தேவஸ்தான அறங்காவலர் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருப்பதி கோவிலின் சார்பில் புதிய டிவி சேனலை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தின்போது இந்த ஒளிப்பரப்பை ஆரம்பிக்க் திட்டமிட்டுள்ளோம்.
இந்த சேனலில் கோவிலில் நடைபெறும் சேவைகள், முக்கிய நிகழ்ச்சிகள், பெருமாளின் பெருமைகள் பற்றிய நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகும் என்றார்.
மேலும் ஒரு வயதுக்குட்பட்ட கைக் குழந்தைகளுடன் தரிசனத்திற்கு வரும் தாய்மார்களுக்கு திருமலை பிரதான வாயில் வழியாக சிறப்பு அனுமதி அளிக்க தேவஸ்தான வாரியம் முடிவு செய்துள்ளது.
தாய்மார்களுக்கு சலுகை:
வரும் சனிக்கிழமை இத் திட்டம் நடைமுறைப்படுத்தபடுகிறது.
மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை குழந்தைகளுக்கு கல்வி அளிக்க பள்ளிக்கூடங்கள் கட்டவும் முடிவு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் திருப்பதி கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications