ஆக்கிரமிப்பு அதிமுக மன்றத்திற்கு சீல்: 5 அதிமுக எம்எல்ஏக்கள் சிறையிலடைப்பு
கோவை:கோவையில், வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த அதிமுக மன்றத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய அதிமுகவைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை செல்வபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடம் ஒன்று உள்ளது. இங்கு சிலர் ஆக்கிரமித்து அதிமுக மன்றம் என்ற பெயரில் சில ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பூங்கா இடத்தை ஆக்கிரமித்த தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் அங்கு தங்களது கட்சிக் கொடியை நட்டனர். இதேபோல மேலும் சில இடங்களை மதிமுக, காங்கிரஸ் கட்சிகளும் சில கட்டடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று மாநகராட்சி ஆணையர் முத்து வீரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அங்கு வந்தனர். அதிமுக மன்றத்துக்கு சீல் வைத்தனர்.
இதுகுறித்த தகவல் பரவியதும் அங்கு அதிமுகவினர் குவிந்தனர். முன்னாள் அமைச்சர்களான செ.ம. வேலுச்சாமி, பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏக்கள் மலரவன், வேலுமணி, சின்னச்சாமி ஆகியோர் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் குதித்தனர்.
பின்னர் அனைவரும் சாலை மறியலில் குதித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மொத்தம் 85 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸாரின் நடவடிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications