ஸ்டாலினுக்கு எதிராக புகார் தராத சுனில்குமார்சென்னை கூடுதல் கமிஷனரானார்!
சென்னை:சென்னை நகர காவல்துறையில் புதிதாக 2வது கூடுதல் ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. 2வது கூடுதல் ஆணையராக சுனில் குமார் பொறுப்பேற்றார்.
சென்னை நகர ஆணையராக லத்திகா சரண் உள்ளார். இவரது பணிகளை பகிர்ந்துகொள்ளும் விதமாக கூடுதல் ஆணையராக ஜாங்கிட் உள்ளார்.
இந் நிலையில் தற்போது 2வது கூடுதல் ஆணையர் பதவியை திமுக அரசு உருவாக்கியுள்ளது. 2வது கூடுதல் ஆணையராக சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை நகரில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் போராட்டம் நடத்தியபோது சுனில்குமாரை ஸ்டாலின் தள்ளி விட்டதாக சர்ச்சை கிளப்பப்பட்டது.
ஸ்டாலின் மீது புகார் தருமாறு சுனில்குமாரை ஜெயலலிதா அரசு நெருக்கியது. ஆனால், ஸ்டாலின் என்னை தள்ளிவிடவில்லை என்று கூறிய சுனில்குமார், இது தொடர்பாக புகார் தரவும் மறுத்துவிட்டார்.
இதனால் இவரை அதிமுக அரசு ஓரங்கட்டி வைத்தது.
அந்த சுனில்குமார்தான் தற்போது 2வது கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போக்குவரத்துப் பிரிவை கவனிப்பார். ஜாங்கிட் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவை கவனிப்பார்.
இதேபோல மத்திய சென்னை இணை ஆணையர் பதவிக்கு புதிதாக பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டார்.
-
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்!












Click it and Unblock the Notifications