தயாநிதிக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரி பதவிபறிப்பு-காத்திருப்போர் பட்டியலில் வெயிட்டிங்
சென்னை:தயாநிதி மாறனுக்கு நெருக்கமானவராக அறியப்படும் சென்னை நகர போலீஸ் இணை கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோர் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரியான ரத்தோர் இப்போது லண்டனில் சுற்றுப் பயணத்தில் உள்ளார். சென்னை மத்திய பிரிவின் இணை கமிஷ்னராக இருந்த ரத்தோர் தூக்கப்பட்டு அந்த இடத்தில் பாலசுப்பிரமணியத்தை நேற்று இரவு தமிழக அரசு நியமித்துள்ளது.
ரத்தோருக்கு பதவி ஏதும் வழங்கப்படவில்லை. அவரை காத்திருக்கும் பட்டியலில் போட்டு வைத்துள்ளனர்.
அதே நேரத்தில் பாலசுப்பிரமணியம் சென்னை போலீஸ் தலைமையகத்தில் இணை கமிஷ்னராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தோர் செய்த பாவம் என்ன
![]() |
சமீபத்தில் சன் டிவி- திமுக மோதல் ஏற்பட்ட பின்னர் முதல்வர் கருணாநிதியின் அரசியல் பொன் விழா நிகழ்ச்சி நடந்தது. அதை நேரடி ஒளிபரப்பு செய்ய சன் டிவியின் அவுட்டோர் பிராட்காஸ்டிங் வேன் (ஓ.பி. வேன்) வந்தது. அந்த வாகத்தை உள்ளே விட வேண்டாம் என திமுக தலைமையிடம் இருந்து போலீசாருக்கு உத்தரவு வந்திருந்தது.
இதையடுத்து சன் டிவி வாகனத்தை போலீசார் தடுத்தனர். ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரத்தோர் சன் டிவி வாகனத்தை உள்ளே அனுமதிக்க முயன்றார். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் போனது. அவர்கள் விரைந்து வாகனத்தை தடுத்து திருப்பி அனுப்பினர்.
ரத்தோரின் இந்த சன் டிவி அனுதாபம் தான் அவரது பதவியைப் பறித்துள்ளது.
இது ஆரம்பம் தான் என்று கூறப்படுகிறது. கட்சியிலும் ஆட்சியிலும் மாறன் குடும்பத்தினருக்கு ேவண்டிய தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் அனைவரும் தூக்கி அடிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு













Click it and Unblock the Notifications