உதவிக்கு ஏங்கும் குட்டி செஸ் சாம்பியன்!
பெங்களூரு:மைசூரைச் சேர்ந்த 10 வயது நிரம்பிய கிரீஷ் கெளசிக் என்கிற இளம் செஸ் வீரர், நிதிப் பிரச்சினையால் செஸ் விளையாட்டைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். நிதியுதவி கிடைத்தால் தான் இந்தியாவுக்கு பெரும் புகழை சேர்க்க முடியும் என்ற நம்பிக்கையை கெளசிக் வெளியிட்டுள்ளார்.
மைசூரைச் சேர்ந்த அருண் கெளசிக்கின் மகன்தான் கிரீஷ் கெளசிக். ஒன்பதரை வயதாகும் கிரீஷ் கெளசிக்குக்குள், ஒரு விஸ்வநாதன் ஆனந்த் ஒளிந்திருப்பதைக் கண்ட அவரது தந்தை இளம் வயதிலேயே கெளசிக்குக்கு செஸ் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்.
அதன் விளைவு பத்து வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் கிரீஷ் கெளசிக். ஆனால் தொடர்ந்து கெளசிக் செஸ் விளையாட வேண்டுமானால் அவருக்கு நிதி தேவைப்படுகிறது.
நல்ல பயிற்சியாளர், சிறந்த பயிற்சி ஆகியவற்றுக்கு பெரும் பணம் தேவைப்படுவதால், அருண் கெளசிக் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கியுள்ளார்.
இதுகுறித்து அருண் கெளசிக் கூறுகையில்,
ரஷியாவிலிருந்து நல்ல பயிற்சியாளர்களை வரவழைத்து பயிற்சி அளிக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் அதிகம் விளையா வேண்டும். அப்போதுதான் கிரீஷ் கெளசிக்கால் வெற்றிகளைக் குவிக்க முடியும். கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான ஈலோ புள்ளிகளையும் பெற முடியும்.
உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்க நல்ல பயிற்சி எடுக்க வேண்டும். இதற்கு ஆண்டுக்கு ரூ. 35 லட்சம் வரை பணம் தேவைப்படும். நமது நாட்டில் கிரிக்கெட்டுக்கு மட்டும்தான் மரியாதை கிடைக்கிறது, உதவிகள் கிடைக்கிறது, நிதியும் குவிகிறது.
ஆனால் செஸ் போன்ற விளையாட்டுக்களுக்கு இங்கு ஆதரவு அதிகம் இல்லை. கர்நாடக அரசும் சரி, பிறரும் சரி எங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இதனால் இனிமேலும் கிரீஷால் செஸ் விளையாட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்குப் போய் விட்டது என்றார் அருண்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜார்ஜியா நாட்டின் படாமி நகரில் நடந்த பத்து வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன் போட்டியில் கிரீஷ் கெளசிக் சாம்பியன் பட்டம் வென்றார். ஆனால் அவருக்கு கர்நாடக விளையாட்டுத் துறை வெறும் ரூ. 25 ஆயிரம் பரிசு மட்டுமே கொடுத்தது.
அதே இடத்தில் நடந்த 8 வயதுக்குட்பட்டோருக்கான சிறுமிகளுக்கான உலக சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்ற கோவாவின் இவனா புர்டாடோவுக்கு கோவா அரசு ரூ. 7 லட்சம் வழங்கிப் பாராட்டியதாம்.
4 வயதிலேயே கிரீஷ் செஸ் விளையாட ஆரம்பித்து விட்டார். வெகு விரைவில் செஸ் ஆட்டத்தின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்ட கிரீஷ், 7 வயதில் மாவட்ட அளவிலான போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
2004ல் மாநில அளவிலான பத்து வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். அதன் பின்னர் மாநில, தேசிய அளவில் பல பட்டங்களை வென்றுள்ளார்.
2004ல் கொச்சியில் நடந்த உலக செஸ் சங்கத்தின் சார்பில் நடந்த போட்டியில் பங்கேற்று சிறந்த இளம் வீரர் பரிசைப் பெற்றார். டெல்லியில் 2005ல் நடந்த 8 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.
தனது செஸ் தாகம் குறித்து கிரீஷ் கூறுகையில்,
லினாரஸ், ஆம்பர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் செஸ் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன். சிறந்த செஸ் வீரர்களுடன் விளையாடி சிறிய வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைக்க ஆர்வமாக உள்ளேன் என்கிறார் கிரீஷ்.
கிரீஷுக்கு மிகவும் பிடித்த செஸ் வீரர் ரஷியாவின் கேரி காஸ்பரோவாம்.
செஸ் உலகில் சரித்திரம் படைக்க துடிக்கும் இந்த இளம் வீரரின் கனவுகள் நனவாக இப்போதைக்கு தேவை பணம் மட்டுமே. அந்த தேவையை நிறைவேற்ற யார் முன்வந்தாலும் நிச்சயம் இன்னொரு விஸ்வநாதன் ஆனந்தை இந்தியா பெற உதவிய பெருமை அவர்களுக்குக் கிடைக்கும்.
கிரீஷ் கெளசிக்கைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
கிரீஷ் கெளசிக்
எண் 796, கிரி நிவாஸ்,
26வது கிராஸ், 4வது மெயின், வித்யாரன்யபுரம்
மைசூர் - 570 008,
கர்நாடகா,
இந்தியா.
அருண் கெளசிக் (தந்தை) - செல்போன் +91-99868-89690
இ-மெயில் முகவரி: [email protected]
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications