தினகரன் தாக்குதல்: 9 பேரை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி
மதுரை: மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றாவாளியான அட்டாக் பாண்டி உள்பட 9 பேரை இரண்டு நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த மே 9ம் தேதி மதுரை தினகரன் அலுவலகம் மீது முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகரியின் ஆதரவாளர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில், ஊழியர்கள் கோபிநாத், வினோத் குமார், வாட்ச்மேன் முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாட்ஷா என்ற மாலிக் பாட்ஷா, பாண்டி என்ற டைகர் பாண்டி, பிரபு, சரவணன், இருளாண்டி, மாரி என்ற குட்டை ரவி, பாண்டி என்ற அட்டாக் பாண்டி, திருச்செல்வம் ஆகியோரை ஒத்தக்டை போலீஸார் கைது செய்து மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைந்தனர்.
இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது. ஒத்தக்கடை சப் இன்ஸ்பெக்டர் ஆலடியான் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ போலீஸார் தனியாக எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த அறிக்கை மதுரை தலைமை குற்றவியல் நடுவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந் நிலையில் சிபிஐ டிஎஸ்பி நந்தகுமார் மதுரை தலைமை குற்றவியல் நடுவரிடம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேரிடமும் சம்வத்தின் உண்மை நிலையை விசாரிக்க வேண்டியுள்ளது.
எனவே அவர்களை 7 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கூறிப்பிட்டிருந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட தலைமை குற்றவியல் நீதிபதி பூபாலன், அட்டக் பாண்டி உள்பட 9 பேரையும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜர்படுத்தும்படி உத்தரவிட்டார். அதன்படி 9 பேரும் மதுரை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பூபாலன் அட்டாக் பாண்டி உள்பட 9 பேரையும் சிபிஐ காவலில் 2 நாள் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications