சோனியாவின் வழிகாட்டுதல் கிடைத்ததுஎனது அதிர்ஷ்டம் - மன்மோகன் நெகிழ்ச்சி
டெல்லிசோனியா காந்தியின் வழிகாட்டுதல் எனது ஆட்சிக்குக் கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்று பிரதமர் மன்மோகன் சிங் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நேற்றுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4வது ஆண்டில் நுழைந்துள்ளது. இதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங், தனது இல்லத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு விருந்தளித்தார்.
நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பேசுகையில், வறுமை ஒழிப்பு, பிராந்திய வளர்ச்சி ஆகியவற்றில் எனது அரசு மிகுந்த கவனம் செலுத்துகிறது. தேசிய வருவாய் மட்டும் உயர்வதால், ஏழ்மை அழிந்து விடாது என்பதை அரசு உணர்ந்துள்ளது.
விவசாயம், ஊரக வளர்ச்சி, தொழில், நகர்ப்புற வளர்ச்சி, அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பெருத்த முன்னேற்றத்தை அடைய எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அரசின் சாதனைகள் பல இருந்தபோதிலும் பண வீக்க உயர்வு இவற்றை மறைத்து விடுவதாக உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பண வீக்கம் ஒரு முக்கிய தடையாக உள்ளது.
மத்திய அரசை சிறப்பாக நடத்துவதற்கு சோனியா காந்தி மிகுந்த உதவியாக இருந்து வருகிறார். சிறந்த வழிகாட்டியாக உள்ளார். அவர் கிடைக்கப் பெற்றது நான் செய்த பாக்கியம். நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்றார் மன்மோகன் சிங்.
நிகழ்ச்சியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றையும் மன்மோகன் சிங் வெளியிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications