மண்டப இடிப்பில் உள்நோக்கம்: விஜயகாந்த்
சென்னை: எனது கல்யாண மண்டபத்தை இடித்ததில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்துக்குச் சொந்தமான கல்யாண மண்டபத்தின் வளாகத்தில் தேமுதிக தலைமைக் கழக அலுவலகம் இருந்தது.
மேம்பாலப் பணிகளுக்காக மண்டபத்தின் முக்கால்வாசிப் பகுதியை அரசு கையகப்படுத்தியது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மண்டபத்தை அரசிடம் ஒப்படைத்தார் விஜயகாந்த். இதையடுத்து மண்டபத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் மிச்சம் மீதி கிடைத்துள்ள இடத்தில் தேமுதிக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று அந்த அலுவலகத்தை விஜயகாந்த் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக அரசு அரசியல் உள்நோக்கத்துடன்தான் திருமண மண்டபத்தை இடித்துள்ளது. மண்டபத்தை இடித்தால் எனது கட்சியின் வளர்ச்சி தடைபடாது.
இது திட்டமிட்ட அரசியல் சதி. அவர்களுடைய இந்த செயலை எதிர்த்து நான் போராட்டம் நடத்த விரும்பவில்லை. ஆகஸ்டு 31ம் தேதி வரை திருமணத்திற்காக மண்டபம் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதை முடித்துவிட்டு கொடுக்கலாம் என்றிருந்தேன்.
மத்திய தரை மற்றும் கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் பாலு, மாற்று வழி இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார். அதனால் மாற்று வழிகுறித்து கூறினோம். ஆனால் அவர்கள் உள்ளாட்சி தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் 10 மாதங்கள் அமைதியாக இருந்தனர்.
ஏனென்றால் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அது தேர்தலில் அனுதாபமாக மாறி எனக்கு வெற்றி கிடைத்துவிடும் என அமைதியாக இருந்துள்ளனர்.
பின்னர் தொழில்நுட்ப காரணங்களுக்காக அந்த மாற்று திட்டத்தை ரத்து செய்கிறோம் என கூறினர். இது குறித்து நான் நீதிமன்றத்தில் சென்ற போது நீதிபதிகள் அதை ஏற்க மறுத்தனர் என்று கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications