மனைவியுடன் தகராறு: செல்போன் டவரில்ஏறி குதிக்கப் போவதாக மிரட்டிய கணவன்
சென்னை: மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த கணவன், செல்போன் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார். அவரை போலீஸார் சமாதானப்படுத்தி கீழே இறக்கினர்.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் முனிராஜ் (30). இவரது மனைவி மகாலட்சுமி. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். தகராறு ஏற்படும் போதெல்லாம் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டுவாராம் முனிராஜ்.
இந்நிலையில் மனைவியுடன் மறுபடியும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோபமாக வீட்டை விட்டு வெளியேறிய முனிராஜ், திருவொற்றியூர் சாலையில் உள்ள செல்போன் நிறுவன கோபுரத்தின் மீது ஏறினார்.
அங்கிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார். இதைப் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். தீயணைப்புப் படையினரும் வந்தனர். அனைவரும் முனிராஜை கீழே இறங்கும்படி கூறினர். அவர் பிடிவாதம் பிடிக்கவே, தீயணைப்பு படையினர் கோபுரத்தின் மீதேறி அவரை கீழே அழைத்து வந்தனர்.
போலீஸாரைப் பார்த்ததும் இனிமேல் இதுபோல செய்ய மாட்டேன் என்றார் முனிராஜ். பின்னர் அவருக்கும், மனைவி மகாலட்சுமிக்கும் போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications