குறைந்தது வெயில்: தமிழகம் முழுவதும் மழை
சென்னை: அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம் குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் கோடை மழை உச்சத்தை அடைந்துள்ளதால் மக்கள் பட்ட அவதி குறையத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 21ம் தேதி கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்தது. அன்று முதல் கொளுத்தி வந்த வெயில் சென்னை, வேலூர், அரக்கோணம், சேலம் உள்ளிட்ட நகரங்களில் மிக உக்கிரமாக இருந்தது.
அக்னி ஆரம்பித்த முதல் நாளிலிருந்து தொடர்ந்து தினசரி 100 டிகிரியைத் தாண்டித்தான் வெயில் வெளுத்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெயிலின் கொடுமை குறையத் தொடங்கியுள்ளது.
சென்னை நகரில் நேற்று வெயில் வெகுவாக குறைந்து 104 டிகிரியாக இருந்தது. இதேபோல பல பகுதிகளிலும் வெயிலின் அளவு குறைந்திருந்தது.
வெயில் குறையத் தொடங்கிய அதே நேரத்தில் கோடை மழை தமிழகத்தின் பல பகுதிகளை நேற்று குளிர வைத்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. குற்றாலம் மலைப் பகுதியில் நல்ல மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது.
வெயில் குறைந்து மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம்












Click it and Unblock the Notifications