சிறையில் கைதிகள் மோதல்-2 பேர் காயம்
சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
புழல் சிறையில் சட்டவிரோதமாக கள்ளசாராயம் காய்ச்சி விற்பனை செய்த கும்பலும், கொள்ளைக் கும்பல் ஒன்றும் அருகருகே இருந்த அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில், பர்மா சீனு, அவருடைய மகன் பாலு என்கிற பாபா சுரேஷ், முத்தையா, தபக் சுரேஷ், டில்லி பாபு, சொறி பாலு ஆகியோர் வழக்கு தொடர்பான வீடியோ கான்பரன்சிங் விசாரணை முடிந்து தங்களது அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கும் இன்னொரு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். கையில் கிடைத்த பொருட்களால் இரு தரப்பினரும் சரமாரியாக அடித்துக் கொண்டனர்.
இந்த மோதலில் பர்மா சீனுவுக்கும், சொறி பாலுவுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இவர்கள் வட சென்னையை சேர்ந்தவர்கள். சீனுவின் மனைவி லட்சுமிதான் தாங்கள் கைது செய்யப்பட்டதற்கு காரணம் என கருதிய கொள்ளை கும்பல் இவர்களை தாக்கியதாக தெரிகிறது.
மோதலைத் தொடர்ந்து இரு தரப்பினர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications