புதிய சென்னை விமான நிலையம்:முடிவெடுக்க பிரதமர் தலைமையில் குழு
டெல்லி:சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவெடுக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் இட நெருக்கடி நிலவுவதால் அதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக பம்மல், பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இத்திட்டம் குறித்து சமீபத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் தற்போதைய விமான நிலையத்தை ரூ. 2000 கோடியில் விரிவுபடுத்துவது எனவும், ஸ்ரீபெரும்புதூர் அருகே புதிய விமான நிலையத்தை அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தற்போதைய விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக பம்மல், பொழிச்சல் பகுதிகளில் நிலம் எடுக்காமல் மணப்பாக்கம், கொளப்பாக்கம், தரப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழக அரசின் இந்த இரு முடிவுகள் குறித்தும் பரிசீலித்து இறுதி முடிவெடுக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கூடி இறுதி முடிவை எடுக்கும்.
-
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications