மதுரை இடைத்தேர்தல்-அதிமுக, தேமுதிகவுக்குஆதரவளிக்க தயார்: பாஜக
சென்னை:மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிக்க பாஜக தயாராக இருப்பதாக அக் கட்சியின் அகில இந்திய செயலாளர் திருநாவுக்கரசர் எம்பி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சொல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. விலைவாசி உயர்வு, பண வீக்க உயர்வு உள்ளிட்ட சில பின்னடைவுகள் மக்களிடையே காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சிக்கு ஒரு கரும்புள்ளியாகிவிட்டது.
விரைவில் நடைபெறவுள்ள கோவா, குஜராத் தேர்தல்களில் பாஜக மிகப் பெரிய வெற்றி பெறும். நதிகள் இணைப்பை முதல்வர் கருணாநிதி வற்புறுத்தி இருக்கிறார். இதை வரவேற்கிறாம். வாஜ்பாய் ஆட்சி நீடித்து இருந்தால் நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும். தற்போதைய நிலையில் தென்னிந்திய நதிகளையாவது இணைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும். ஏற்கனவே இதற்கான திட்டம் பாஜக ஆட்சியிலேயே தயாரிக்கப்பட்டு விட்டது.
வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் சுய வேலை வாய்ப்புக்கான ஒரு வாரியம் அமைக்க வேண்டும். படிக்கும் மாணவர்களுக்கு ஜாமீன் இல்லாம் வழங்கும் தொகையை படிப்புக்கு தகுந்தாற்போல அதிகரிக்க வேண்டும்.
மதுரை இடைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று மாநில தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். இருந்தாலும் காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் ஆதரவை நேரடியாக கேட்டால் நாங்கள் ஆதரிக்க தயாராக இருக்கிறோம். எங்களை அவர்கள் ஆதரித்தாலும் ஏற்றுக் கொள்வோம். இல்லை என்றால் தனித்து போட்டியிவோம் என்றார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications