முதலில் தென்னக நதிகளை இணைக்க கருணாநிதி கோரிக்கை
சென்னை:காவிரி, கோதாவரி, கிருஷ்ணா ஆகிய தென்னக நதிகளை முதலில் இணைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது,
1970ம் ஆண்டு மத்திய நீர்ப்பாசன அமைச்சராக இருந்த கே.எஸ்.ராவ் காலத்திலிருந்து நதிகள் இணைப்பு பற்றி நாம் பேசி வருகிறோம். ஆனால் இதுவரை அதற்கு தீர்வு காணப்படவில்லை.
இனி பேசிகொண்டு இல்லாமல் செயலில் ஈடுபட வேண்டிய நேரம் வந்து விட்டது. நதிகள் இணைப்பு திட்டத்தை எப்படி நிறைவேற்றலாம் என்பது குறித்து முன்பே யோசனை தெரிவித்து இருந்தேன். மலைப்பாங்கான பகுதிகளில் இருந்து தண்ணீர் வழியும் தாழ்வான பகுதிகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதன் மூலம் மின்சாரமும் தயாரிக்க முடியும். அப்போது இந்த யோசனையை ஏற்றுக் கொண்டனர். ஆனால் அது வெறும் பேச்சளவில் நின்று விட்டது.
காவிரி, கிருஷ்ணா, கோதாவரி போன்ற தென்னக நதிகளை உடனடியாக இணைக்க வேண்டும். இதனால் தென் மாநிலங்கள் அனைத்தும் பயன் பெறும். ஒரு மாநிலத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு மற்றொரு மாநிலத்திற்கு ஏற்படும் குடிநீர் பிரச்சனை, விவசாய பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
கங்கை நதியுடன் தென்னக நதிகளை இணைக்கும் பணிகளை அடுத்த கட்டமாக மேற்கொள்ளலாம். தென் மாநில நதிகளை இணைக்கும் பணிகளை முதலில் தொடங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடும் வற்றாத ஜீவநதிகள் எதுவும் உற்பத்தியாகவில்லை. மற்ற மாநிலங்களில் இருந்து தான் நதி நீரை நம்பி இருக்க வேண்டிய நிலையுள்ளது. நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் 175 பகுதிகளில் நிலத்தடி நீர் அதிகளவு எடுக்கப்பட்டு அபாயகரமான நிலையில் உள்ளது என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications