Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ்எஸ்எல்சி: மாணவிகள் 83% மாணவர்கள் 76% தேர்ச்சி-செங்கல்பட்டு மாணவி அக்ஷயா முதலிடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:பத்தாம் வகுப்பு தேர்வில் செங்கல்பட்டை சேர்ந்த அக்ஷயா மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார்.

இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. மொத்தம் 8,67,707 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். இதில் 79.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களில் மாணவிகள் 83 சதவீதமும் மாணவர்கள் 76 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு புனித மேரி பெண்கள் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ்.அக்ஷயா 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அக்ஷயாவின் தந்தை, தாயார் இருவரும் டாக்டர்கள் ஆவர். பெற்றோரைப் போலவே தானும் டாக்டராகப் போவதாக அக்ஷயா கூறியுள்ளார்.

Atchya

அக்ஷயாவின் மதிப்பெண் விவரம்:

தமிழ்-97

ஆங்கிலம்-96

கணிதம்-100

அறிவியல்-98

சமூக அறிவியல்-99

சேரன்மாதேவியைச் சேர்ந்த அமலி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜெசீமா சுலைஹாவும், திருவாரூர் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த சிவகாமசுந்தரியும், புந்துச்சேரி விவேகானந்தா உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த திவ்யபாரதியும் 489 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

தக்கலை அமலா பள்ளியைச் சேர்ந்த லம்சே, தூத்துக்குடி ஸ்பிக் நகர் பள்ளியைச் சேர்ந்த பாலவித்யா, மயிலாடுதுறை டிபிடிஆர் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி, கடலூர் புனித ஜோசப் பள்ளியைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

கணிதப் பாடத்தில் 2,512 பேரும், அறிவியலில் 66 பேரும், சமூக அறிவியலில் 10 பேரும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு கணிதப் பாடத்தில் 13,033 பேர் நூற்றுக்கு நூறு பெற்றனர். இந்த முறை அது 2,512 ஆகக் குறைந்துவிட்டது.

மெட்ரிகுலேசன்:

இதே போல் மெட்ரிகுலேசன் தேர்வில் ஈரோடு கலைமகள் கல்வி நிலைய பெண்கள் பள்ளி மாணவி ஆர்த்தி 1,074 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலாவதாக வந்துள்ளார்.

இவருடைய மதிப்பெண் விவரம்:

தமிழ்-194

ஆங்கிலம்-184

கணிதம்-200

அறிவியல்-300

வரலாறு புவியியல்-196

ஆங்கிலோ-இந்தியன்:

ஆங்கிலோ-இந்தியன் தேர்வில் திருச்சி செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவி சுபஸ்ரீ 963 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் இடம்பிடித்துள்ளார்.

2வது இடத்தில் திருச்சி சேம்பியன் மேல்நிலைப்பள்ளி மாணவர் வெங்கட் ரஜாத் 959 மதிப்பெண்களும், கோவை செயிண்ட் பிரான்சிஸ் பள்ளி மாணவி அருணா 958 மதிப்பெண்களுடன் 3 வது இடத்திலும் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+