மதுரை இடைத் தேர்தல்: 3 உதவி ஆணையர்கள் மாற்றம்
மதுரை:மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக 3 உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மேற்கு தொகுதியில் ஜூன் 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி சர்ச்சைக்குரிய காவல்துறை அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடம் மாற்றி வருகிறது.
இந்த நிலையில், 3 உதவி ஆணையர்கள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அண்ணா நகர் உதவி ஆணையர் குமாரவேலு கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திலகர் திடல் உதவி ஆணையர் ராஜேந்திரன் சிபிசிஐடி பிரிவுக்கும், டவுன் உதவி ஆணையர் சுந்தரேசன் எந்தப் பதவியும் இல்லாமலும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம்தான் எட்டு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏழு சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு நிபந்தனைகள்:
மத்திய, மாநில அமைச்சர்கள் அரசு சம்பந்தப்பட்ட பணிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளக்கூடாது என தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தல் நாள் அறிவித்த பின் மத்திய, மாநில அமைச்சர்கள் தங்கள் துறை சம்பந்தப்பட்ட அரசு பணிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது. பணி முடிந்தவுடன் தலைமையகத்திற்கு திரும்ப வேண்டும்.
தேர்தல் அறிவித்துள்ள மாவட்டத்திற்கு அரசுப் பணிக்காக செல்லும் அமைச்சர்கள் தேர்தல் நடக்கும் மாவட்டத்தில் தங்க கூடாது.
தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைக்கக் கூடாது. அரசு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தொகுதி அமைச்சர்களை சந்திப்பது தவறான நடவடிக்கை ஆகும்.
தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு செல்லும் அமைச்சர்கள் பைலட் கார்களையோ, சிவப்பு விளக்கு சுழலும் வாகனங்களையோ பயன்படுத்த கூடாது.
ஆயதம் ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் மத்திய அல்லது மாநில அமைச்சர்கள் பாதுகாப்பு வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. அவர்களுடைய வருகை தெரிவிக்கும் வகையில் தெரிவிக்கும் வகையில் எந்தவிதமான ஒலிகளையும் எழுப்பக் கூடாது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications