10 வயதில் 3 கொலைகள்-பீகாரில் பயங்கரம்
பாட்னா:பீகாரைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன், 1 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்களைக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பகுசராய் மாவட்டத்தைச் சேர்ந்த முஷாராய் கிராமத்தைச் சேர்ந்தவன் அமர்ஜீத் சதா. இவனுக்கு வயது 10. ஆனால் இந்த வயதுக்குள் 3 சிறுவர்களைக் கொன்றதாக அமர்ஜீத் மீது புகார் எழுந்துள்ளது. இந்தப் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளான் அமர்ஜீத்.
முஷாராய் கிராமத்தைச் சேர்ந்த சுன்சுன் தேவி என்பவரின் மகள் குஷ்பு. பிறந்து 6 மாதமே ஆகிறது. செவ்வாய்க்கிழமை குஷ்பு காணாமல் போனாள். பின்னர் அவளது இறந்த உடல் ஒரு இடத்தில் புதைக்கப்பட்டிருந்தது.
குஷ்புவை தான்தான் கழுத்தை நெரித்துக் கொன்றதாக அமர்ஜீத் சதா கூறினான். இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீஸார் அவனிடம் விசாரித்தபோது குழந்தை புதைக்கப்பட்ட இடத்தைக் காட்டினான்.
மேலும் அவனிடம் விசாரித்தபோது இதுபோல, தனது எட்டு மாத தங்கை, 9 மாதமே ஆன உறவினரின் குழந்தையையும் கொன்றதாக அமர்ஜீத் கூறினான். இதையடுத்து போலீஸார் அவனைக் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவனை சிறார் சிறையில் அடைத்தனர். அமர்ஜீத்திற்கு மன நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications